அன்றாடச் செபங்கள்
பரலோக மன்றாட்டு (எங்கள் தந்தையே)
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக.
உமது ஆட்சி வருக.
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல
மண்ணுலகிலும் நிறைவேறுக.
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,
தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
மத்தேயு 6:9–13 · தமிழ் மொழிபெயர்ப்பு — மறைமாவட்ட செபப் புத்தகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்