செபங்கள்

அன்றாடச் செபங்கள்

திருத்தூதர்களின் விசுவாச அறிக்கை

விண்ணையும் மண்ணையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன்.
அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன்.
இவர் தூய ஆவியால் கருவுற்று, கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்;
பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டு,
சிலுவையில் அறையப்பட்டு, இறந்து அடக்கம் செய்யப்பட்டார்;
பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்;
விண்ணகம் ஏறி, எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்;
அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார்.

தூய ஆவியாரை நம்புகிறேன்.
தூய கத்தோலிக்கத் திருச்சபையையும், புனிதர்களின் உறவையும் நம்புகிறேன்.
பாவ மன்னிப்பை நம்புகிறேன்.
உடலின் உயிர்ப்பை நம்புகிறேன்.
நிலைவாழ்வை நம்புகிறேன். ஆமென்.

தமிழ் மொழிபெயர்ப்பு — மறைமாவட்ட செபப் புத்தகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்

இப்பகுதியில் மேலும்