செபங்கள்

பிரான்சிஸ்கன் செபங்கள்

அமைதியின் செபம்

ஆண்டவரே, என்னை உமது அமைதியின் கருவியாக்கும்:
பகை உள்ள இடத்தில் அன்பையும்,
காயம் உள்ள இடத்தில் மன்னிப்பையும்,
ஐயம் உள்ள இடத்தில் விசுவாசத்தையும்,
நம்பிக்கையின்மை உள்ள இடத்தில் நம்பிக்கையையும்,
இருள் உள்ள இடத்தில் ஒளியையும்,
துயரம் உள்ள இடத்தில் மகிழ்ச்சியையும் விதைக்கச் செய்யும்.

தெய்வீகப் போதகரே, ஆறுதல் பெறுவதை விட ஆறுதல் அளிக்கவும்,
புரிந்துகொள்ளப்படுவதை விடப் புரிந்துகொள்ளவும்,
அன்பு செய்யப்படுவதை விட அன்பு செய்யவும் அருள்தாரும்.

ஏனெனில் கொடுப்பதிலேயே நாம் பெறுகிறோம்;
மன்னிப்பதிலேயே மன்னிப்புப் பெறுகிறோம்;
இறப்பதிலேயே நிலைவாழ்வுக்குப் பிறக்கிறோம். ஆமென்.

புனித பிரான்சிஸின் உணர்வில் அமைந்த செபம் · தமிழ் மொழிபெயர்ப்பு — மறைமாவட்ட செபப் புத்தகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்

இப்பகுதியில் மேலும்